spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்! அடுத்து வெளிவரும் அந்த தலைவர்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்! அடுத்து வெளிவரும் அந்த தலைவர்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

-

- Advertisement -

அண்ணாமலை மற்றும் பாஜகவின் தூண்டுதல் காரணமாகவே செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளதாகவும், அதற்கு பதிலடியாகவே அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அடுத்தக்கட்டமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். அதிமுகவுக்கும் அவருக்கும் தொடர்பே இருக்காது. எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையிலான மோதல் என்பது சாதாரணமாக நாம் பார்க்கிற மோதல் எல்லாம் கிடையாது. இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று பாஜகவின் பார்வை. மற்றொன்று இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையாகும். எடப்பாடி பழனிசாமியின் பி.ஏ. ஆக இருக்கும் எழில் என்பவர்தான் 1977ல் கோபி, சத்தியமங்கலம் தொகுதிகளில் போட்டியிட எம்ஜிஆரால் தேர்வு செய்யப்பட்டவர். அவரிடம் சென்று செங்கோட்டையன் கெஞ்சி கூத்தாடி, போட்டியில் இருந்து விலகச் செய்ததால் செங்கோட்டையன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் இருந்து கிட்டதட்ட 18 பேரை செங்கோட்டையன்  வெளியேற்றி உள்ளார். அவர்களில் முக்கியமானவர் எடப்பாடி பழனிசாமியை வளர்த்து ஆளாக்கிய முத்துசாமி. செங்கோட்டையன் பலரையும் மேலிடத்தில் போட்டுக்கொடுத்து பழிவாங்கி அரசியலில் மேலே வந்தவர். இவரது அரசியல் எடப்பாடி பழனிசாமிக்கு அறவே பிடிக்காது. எனவே தனக்கு நெருக்கமான கே.சி.கருப்பணன் என்பவரை, செங்கோட்டையனுக்கு எதிராக கட்சியில் மேலே கொண்டுவந்தார்.

முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு, கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பொறுப்பு வழங்க சசிகலா முடிவு செய்தார். அந்த சமுதாயத்தில் அவரது முதல் தேர்வாக செங்கோட்டையன் இருந்தார். ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.4 கோடி வழங்குமாறு சொல்கிறார். அவரிடம் நிறைய பணம் இருந்தபோது, அந்த பணத்தை உடனடியாக எடுக்க முடியாது. காரணம் மத்தியில் இருந்த பாஜக அரசு சசிகலாவுக்கு எதிராக இருந்தது. பாஜக பல ஷிண்டேக்களை உருவக்கியிருக்கிறது. அவர்களில் முதல் ஷிண்டே ஓபிஎஸ், அவர் வேலைக்கு ஆக வில்லை. இரண்டாவது ஷிண்டேவாக வேலுமணியையும், செங்கோட்டையனையும் வைத்து முயற்சி செய்கிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தனர். தற்போது செங்கோட்டையன் பொறுப்பு பறிக்கப்பட்டதும் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், நயினாருக்கு என்.டி.ஏ கூட்டணியை சரியாக வழிநடத்த தெரியவில்லை என்று சொல்கிறார். எனவே தற்போது டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் என 4 ஷிண்டேக்கள் உள்ளனர். வேலுமணி துணையுடன் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி டீமுடன் பேசினார். அப்போது, நீங்கள் பேசக்கூடாது. தற்போது பேசுவதாக அறிவித்து விட்டீர்கள். எனவே பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். எக்காரணத்தை கொண்டும் எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்வது போன்ற விஷயத்தை பேசக் கூடாது என்று செங்கோட்டையனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்ததன் மூலம் தவறு செய்துவிட்டார். அவரது பேச்சில் வேறு எங்கும் எடப்பாடியை தாக்கி பேசி இருக்க மாட்டார். கடந்த காலங்களில் அதிருப்தி தலைவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அழைத்து வந்துள்ளதை தான் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதும்  செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கவில்லை. பொறுப்பில் இருந்துதான் நீக்கியுள்ளனர். அதற்கு காரணம் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில், செங்கோட்டையனிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, செங்கோட்டையனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 18 பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க கெடு விதிக்கட்டுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதனுடைய நீட்சி தான் தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்கிறபோது, அப்படி வரலாம். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பாசிட்டிவ் ஆக தான் அணுகுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, அண்ணாமலை, வேலுமணி ஆகியோர் பேசியதை கேட்டு தான் தப்பு செய்துவிட்டேன். அவர்கள் தான் எனக்கு கெடு விதிக்க சொன்னார்கள் என்று செங்கோட்டையன் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமியின் யாத்திரை வெற்றி பெற்றுவிட்டது. அவருடைய யாத்திரைக்கு உண்மையான அதிமுக தொண்டர்கள் வருகிறார்கள். தற்போதுதான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி வாகனத்தை வழிமறிக்கிறார்கள். அவர் தேவர்களுக்கு எதிரானவர்கள் என்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதுவரை அதுபோன்ற எதிர்ப்பு வந்தது கிடையாது. எனவே எடப்பாடி பழனிசாமியின் யாத்திரைக்கு செக் வைப்பதற்காக தான் செங்கோட்டையனை செய்தியாளர் சந்திப்பை நடத்த வைத்தனர். அவரது செய்தியாளர் சந்திப்பில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படாவிட்டால் எடப்பாடி, பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று பேசுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அப்படி பேசவில்லை. ஆனால் அண்ணாமலை போன்றவர்கள் சொல்லியதால், எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார்.

EPS - ஈபிஎஸ்

தேர்தல் வெற்றி, தோல்விகளை தாண்டி அதிமுகவை அழிப்பதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபடுகிறது. இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் வல்லமை தனக்குதான் இருக்கிறது என்றும், தன்னிடம் 117 இடங்களை பிரித்துக் கொடுத்து விட்டால் தாங்களே பிரச்சினையை பார்த்துக்கொள்வதாக கூறுகிறார்கள்.  அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நான்தான் பாஸ் என்று சொல்கிறார். ஆனால் அமித்ஷா இன்று வரை எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. அவர்கள் நேற்று வரை 117 இடங்கள் வாங்குவதில் தான் குறியாக உள்ளனர். அதுதான் செங்கோட்டையன் பேச்சு போன்ற விஷயங்களாகும். இதற்கு பதிலடியாக தான் செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். செங்கோட்டையன் இத்துடன் அடங்க மாட்டார்.  பாஜக அவரை தூண்டிவிடும். பாஜகவுக்கு 2 உத்தரவாதங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது எடப்பாடி கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது. மற்றொன்று 117 இடங்கள் கொடுக்க வேண்டும். அதற்காக பாஜக மீண்டும் பிரச்சினை செய்வார்கள். செங்கோட்டையனை வைத்து  மீண்டும் செய்தார்கள் என்றால், அவர் கட்சியில் இருந்து  நீக்கப்படுவார். பேச்சுவார்த்தையின்போது, தனக்கு துணைப் பொதுச்செயலாளர் வழங்க வேண்டும் என கேட்டார். அதற்கு இறங்கி வந்த பிறகுதான் அவர் கெடு விதித்தது. அப்படி அவரை பேச வைத்து பாஜக டீம்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ