spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசமூக ஊடகங்களுக்குத் தடை... கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

-

- Advertisement -

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமூக ஊடகங்களுக்குத் தடை... கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை  கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. இதனை எதிர்த்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

we-r-hiring

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக்க கூறி நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளால் கலைக்க முயன்றனர்.

பிரதமரின் உருவப் பொம்மையை எரித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் 80 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மீது தீ வைக்கப்பட்டதால் நிலைமை மேலும் பதற்றமடைந்தது.

இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு உட்பட பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், நேபாள அரசு பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

ரவி மோகன் இயக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்!

MUST READ