spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

-

- Advertisement -

ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

சென்னை சூளைமேடு காந்தி ரோடு சாலையில் நேற்று இரவு மதுபோதையில் இருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று சாலை குறுக்கே ஓடிவந்தது. பைக்கில் வந்தவர்கள் கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து காயமடைந்த இருவரையும் மீட்டனர். அப்போது அவர்கள் கையில் இரண்டு ஆடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் ஆடுகளை திருடி கொண்டு தப்பி சென்ற போது நாய் மீது மோதி சிக்கியது தெரியவந்தது. ‌‌உடனே பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

we-r-hiring

பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (30), பிரஜன் குமார் (27) என்பது தெரியவந்தது.. மேலும் இவர்கள் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து ஏற்கனவே சூளைமேடு பகுதியில் இரண்டு ஆடுகளை திருடி சென்று விற்று பணம் பெற்றதும், பின்னர் மேலும் இரண்டு ஆடுகளை திருடி செல்லும் போது பொதுமக்களிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதனை அடுத்து போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.மேலும் தப்பி ஓடிய அவர்களது கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ரஜினி, தனுஷுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனிடம் அதை பார்க்கிறேன்…. நாகார்ஜுனா பேச்சு!

MUST READ