spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

-

- Advertisement -

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.சிறுமியை கடத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன் (26) என்ற வாலிபர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அந்த புகாரின் பேரில் கடத்தல் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து சந்திரனை காவல்துறையினா் கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி சுதா இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி சந்திரனுக்கு கடத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறையும் 1,000 ரூபாயும் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உமா தேவி ஆஜராகி வாதாடினார்.

பல் பிடுங்கிய விவிகாரம்… ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக மாட்டாரா? நீதிபதி சரமாரி கேள்வி…

we-r-hiring

MUST READ