மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மணிமுக்தா அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மணி மற்றும் முக்தா ஆறுகளின் வழியாக தொடர்ந்து சுமார் 1500 கன அடி உபரிநீரானது வந்து கொண்டிருக்கும் நிலையில் மணிமுக்தா அணையின் பழைய ஷட்டர்கள் பழுதுபார்க்கும் பணிக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் 20.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் முதல் ஷட்டர் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் 1500 கன அடி உபரி நீரும் அப்படியே ஆற்று வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணையில் ஷட்டர் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் உபரி நீர் முழுவதுமாக ஆற்று வாய்க்கால்கள் வழியாக திறந்துவிடப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை



