spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…

-

- Advertisement -

ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடி கைது…சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வருகிறார். நேற்று  காலை 11 மணியளவில், பெரியாா் நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதிய பணத்தை எடுத்துக் கொண்டு, மதியம் 12 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்து, அதனை தனது மனைவியிடம் கொடுக்க முயன்ற போது, பின்னால் வந்த மர்ம  நபர் பணத்தை பிடுங்க கொண்டு வெளியே காத்திருந்த கூட்டாளியுடன் தப்பிச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார்  இது குறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

செம்பியம்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தொடர்ந்து போலீசார் பணத்தைப் பறித்து சென்ற இருவர் குறித்து விசாரணை நடத்தியதில் இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து செம்பியம் போலீசார் இன்று காலை திருமுல்லைவாயில் பகுதியில் வைத்து வில்லிவாக்கம் ராஜமங்கலம் ஆறாவது தெருவை சேர்ந்த ஜார்ஜ் புஷ் 33 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் 34 என இருவரை கைது செய்தனர். இவர்கள் நேற்று அஞ்சல் அலுவலகத்தில் சுகுமார் பணத்தை எடுக்கும் போதே பார்த்து அவரை பின்தொடர்ந்து வந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 81000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

we-r-hiring

MUST READ