spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைSIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழகத்தில் SIR நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட போவது திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் தான் என்று மூத்த பத்திரகையாளர் தராசு ஷ்யாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

SIR நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எஸ்.ஐ.ஆர். ஆதரவு, எதிர்ப்பு என்பதை திமுக ஆதரவு, எதிர்ப்பு என்று பார்க்க கூடாது. வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாகும். வாக்குரிமை இல்லாவிட்டால் இறந்ததற்கு சமமாகும். அந்நிய ஊடுருவல்காரர்களை அகற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு இத்தனை கோடி மக்களையும் தேர்தல் ஆணையம் வாட்டி வதைக்கிறது. நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எஸ்.ஐ.ஆர் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. அதற்கு காரணம் வாக்காளர் அட்டை எண் நமக்கு வந்ததே 2006ஆம் ஆண்டுதான். அதனால் தேர்தல் ஆணைய எஸ்ஐஆர் பட்டியலில் நமது பெயர் இடம்பெற்றிருக்காது.

we-r-hiring

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பூத் லெவல் அதிகாரி விண்ணப்பங்களை வழங்கினால்தான் நம்முடைய பெயர்களை சேர்க்க முடியும். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதே பெரிய குழப்பமாக உள்ளது. அதேபோல் இணையதளத்தில் பெயர் சேர்ப்பு விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்ப முடியாது. அந்த விண்ணப்பத்தை பிடிஎஃப் ஆக டவுன்லோடு செய்து, நிரப்பி ஸ்கேன் செய்து மீண்டும் ஏற்ற வேண்டும். அது சாதாரண மக்களால் முடியாத காரியமாகும். தேடிப்பார்த்தோம் என்றால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் பெயரே எஸ்.ஐ.ஆரில் இருக்காது.

People are confused by voter registration correction work..!! Will the Election Commission clarify??

வாக்காளர் பட்டியலை சரிவர செம்மைப்படுத்தி, தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற தேர்தல் ஆணைய நோக்கத்தில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், ஒரு மாதத்திற்குள் 3 முறை வந்து எப்படி செய்வார்கள். தேர்தல் தூய்மையாக இருப்பதற்கு வாக்காளர் பட்டியல் தூய்மையாக இருப்பதைவிட, தேர்தல் நடைமுறைகள் தூய்மையாக இருக்க வேண்டும். ரூ.10 கோடி இல்லாமல் ஒரு சாமானியன் தேர்தலில் நிற்க முடியுமா? அப்படி விட்ட பணத்தை அவர்கள் எப்படி எடுப்பார்கள்? இதை தடுக்க முடியாதா?

பாஜக கோவாவில் வாக்காளர்களுக்கு ரூ. 4,000, ரூ. 5,000 வழங்கியது. அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி கொடுத்தார் என்ற தூக்கி உள்ளே போட்டார்கள். ஆனால் இதுவரை அந்த வழக்கே நடைபெறவில்லை. பிறகு எப்படி இந்த நாட்டில் உள்ள அமைப்புகள் மீது நம்பிக்கை வரும்? உச்ச நீதிமன்றம் தூங்குகிறது. நாட்டில் உள்ள மிகப்பெரிய வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் இந்த அநியாயத்தை எல்லாம் போக்க புரட்சி வந்தால்தான் சரியாக வரும் என்று சொல்கிறார்கள். அவர்கள் இப்படி சொல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எஸ்.ஐ.ஆர் நவடடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ள வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளன. பீகாரில் எஸ்.ஐ.ஆர் பிரச்சினை எழுந்தபோது உச்சநீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீகார் தேர்தலே முடியப் போகிறது. ஆனால் இன்று வரை அவர்களுக்கு விழிப்பு வரவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கும் உடனடியாக முடிவு எடுக்கப் போகிறதா? திமுக சட்டப் போராட்டத்திற்கும் செல்கிறது. வீடியோக்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறது. அதேநேரத்தில் கிராமங்களில் திமுக நிர்வாகிகள் கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட போவது அதிமுகவும், பாஜகவும் தான்.

மக்களுக்கு பல்வேறு பணிகள் இருக்கிறபோது தேர்தல் ஆணையம் வாட்டி வதைக்கிறது. குறுகிய காலகட்டத்திற்குள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முடிப்பது என்பது சாத்தியமில்லை. தேர்தல் பணிகளுக்கு என்று தனிப்பட்ட அதிகாரிகள் கிடையாது. எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஆட்கள் அவர்களுக்கு ஆதரவாக தான் எடுப்பார்கள் என்று சொல்கிறார். அப்படி என்றால் எதற்காக எஸ்.ஐ. ஆரை நடத்துகிறீர்கள். அப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக தான் எடுப்பார்களா? பீகார், மத்திய பிரதேசத்தில் அப்படிதான் நடைபெற்றதா?

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால்? அதற்கான கால அவகாசம் போததாது. பி.எல்.ஓக்களால் இவற்றை முழுமையாக செய்ய முடியாது. அரசிடம் பணியாளர்கள் போதிய அளவில் இல்லை. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுவதன் காரணமாக அரசின் மற்ற பணிகள் பாதிக்கப்படும். இதை தவிர்த்து பலத்த மழை பெய்தால் இந்த பணிகள் எல்லாம் நின்றே போய்விடும். எஸ்.ஐ. ஆர் நடவடிக்கையால் திமுக மட்டுமின்றி, அனைத்து கட்சிகளும் பாதிக்கப்படும். பாஜக, அதிமுக போன்ற அனைத்துக்கட்சிகளும் பாதிக்கப்படும்.

தற்போதைய வாக்காளர் பட்டியலை வைத்து, நாட்டின் பிரதமரையே தேர்வு செய்துவிட்டோம். அது தவறு என்றால் என்னுடை வாக்கை திருப்பி கொடுத்துவிட்டு, பிரதமரை பதவியை விட்டு விலக சொல்லுங்கள். மக்களவை தேர்தல் முடிந்து ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய பெயர் உள்ளது. ஆனால் எஸ்ஐஆரில் பெயர் இல்லை. காரணம் எஸ்.ஐ.ஆர் என்பது பழையது.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு என்றால் பாஜக. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு என்றால் அது திமுக. இப்படியான ஒரு மனநிலையை இங்கே உருவாக்கியுள்ளனர். ஆனால் அப்படி கிடையாது. வாக்காளராக நான் இருக்க வேண்டும். அது என்னுடைய உரிமை. நான் யாருக்கு வேண்டும் என்றாலும் ஓட்டு போடுவேன். அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியிருக்கு சிறப்பு அது. அதை பறிக்க ஞானேஸ்குமாரின் அப்பாவுக்கும் உரிமை கிடையாது என்பதுதான் உண்மை. 3 வார காலத்திற்குள், 3 முறை வாக்காளர்களிடம் நேரடியாக சென்று சரிபார்ப்பது என்பது முடியாத காரியம். நகர்ப்புறங்களில் அது சாத்தியமே கிடையாது.

ஊடுருவல்காரர்கள் வந்துவிட்டார்கள் என்றால் அவர்களை தடுக்க வேண்டியது உள்துறை அமைச்சகம் தானே. அவர்கள் ஏன் செய்யவில்லை. பீகாரில் தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல்தான் மகாராஷ்டிரா தேர்தலிலும் நடைபெற்றது.  அப்போது தேர்தல் ஆணையம் பாஜக உடனோ, அல்லது மத்தியில் ஆளுகிற கட்சியுடனோ மறைமுகமாகவோ, நேரடியான தொடர்பு வைத்துள்ளீர்கள். அதனால் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட எல்லாவற்றிலும் சந்தேகம் வரும். தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் நிறைய பெயர்கள் அழிக்கப்படும். நீக்கப்பட்டவர்கள் எல்லாம் திமுகவினர் என்று சொல்வார்கள். எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ.ஆரை ஆதரிப்பது என்பது, பாஜகவை ஆதரிப்பது என்று நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ