spot_imgspot_img
Homeசெய்திகள்என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது - ராஜேஷ் குமார்!

என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது – ராஜேஷ் குமார்!

-

- Advertisement -

உங்கள் கதையை திருடியவர்கள் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்விக்கு? என் கதையை திருடியதே எனக்கு வெற்றி தானே என பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது - ராஜேஷ் குமார்!

பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் உலகை விலை கேள் என்கிற நாவல் ரேகை என்ற பெயரில் இணைய தொடராக எடுக்கப்பட்டுள்ளது. தினகரன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் பால ஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி, வினோதினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வரும் 28ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராஜேஷ் குமார் பேசியதாவது, என்னுடைய விவேக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க எந்த நடிகரும் வேண்டாம். புதிய நடிகர் நடித்தால் போதும். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தை விவேக் ஆக ரசிகர்கள் பார்ப்பார்கள். சினிமாவும் எழுத்தும் தான் எனது இரண்டு கண்கள். என்னிடம் நிறைய கதைகள் உள்ளது.‌ சினிமா ஒரு வட்டத்திற்குள் சுற்றி வருகிறது.  கதையும் களமும் புதிதாக இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. என்னிடம் எல்லா கதைகளும் இருக்கிறது. யாராக இருந்தாலும் என்னிடம் வரலாம்.

சமீபத்தில் நடிகர் சந்தானம் என்னிடம் இரண்டு நாட்கள் தங்கி ஒரு கதை எழுதி வாங்கிச் சென்றார். உங்கள் கதைகளில் வந்த காட்சிகளை வேறு படங்களில் பயன்படுத்தியவர்கள் மீது நீங்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, வழக்கு போட்டால் நீண்ட காலம் நடக்கும் என்று நகைச்சுவையாக பேசிய அவர், எனது கதையை திருடி விட்டார்கள் என்பது சொல்வதே எனக்கு வெற்றிதானே.  அன்னதானம் மாதிரி இது விஷயதானம் அவ்வளவுதான் என்றார்.

கதை திருட்டு பற்றிய கேள்விக்கு, எல்லாவற்றிற்கும் மனசாட்சி ஒன்று இருக்கிறது. எல்லாவற்றையும் காலம் பார்த்துக் கொள்ளும். என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது எனது கதைகளை திருடி எடுத்தவர்கள் இப்போது சினிமாவிலேயே இல்லை. எனக்கு சரியாக பணம் கொடுத்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றார்.

சொன்னபடி ரிலீஸ் ஆகுமா கார்த்தியின் ‘வா வாத்தியார்’?…. குழப்பத்தில் ரசிகர்கள்!

MUST READ