நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனா்.
நொளம்பூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி 70 வயதான மேரி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்றிரவு மூதாட்டியின் வீட்டில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த நபர் வீட்டில் சென்று பார்த்தபோது மூதாட்டி சுயநினைவு இன்றி படுத்து கிடந்த நிலையில், ஒரு நபர் அருகிலேயே அமர்ந்துள்ளார். சந்தேகம் அடைந்த அவர் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த நபர் தப்பியோட முயன்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது நொளம்பூர் பகுதியை சேர்ந்த காராமணி என்கிற ஏழுமலை (65) என்பதும், அவரது பாக்கெட்டில் மூதாட்டியின் இரண்டு கம்மல்கள் மற்றும் செயின் இருப்பதும் தெரிய வந்தது. சுயநினைவின்றி கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னா் ஏழுமலையை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை! அமித்ஷாவின் திருப்பரங்குன்றம் திட்டம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!



