அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மாதா(35), இவர் அம்பத்தூர் T1 காவல் நிலையத்தில் உதவியாளர் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் வீட்டின் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர்கள் தகவல் அளித்த நிலையில், சம்பவ இடம் சென்ற அம்பத்தூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்தோணி மாதா கடந்த 2021 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்ததாகவும் தற்போது அம்பத்தூர் காவல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்தோணி மாதாவிற்கு மீஞ்சூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரஞ்சித் என்ற ஆண் உதவி ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நேற்று அவரை வீட்டிற்கு வரச் சொல்லி அவர் வராத காரணத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை குறித்து உதவி ஆய்வாளர் ரஞ்சித்திடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திராவிட மாடல் 2.0, வெற்றிக்கான புதிய பயணம், இன்று தொடங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



