மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.
(மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்) ”ஜி ராம் ஜி” என்ற புதிய சட்டம் மூலம் மாநிலங்களின் தலையில் நிசிச்சுமை ஏற்றியது பற்றி வாய் திறக்க பழனிச்சாமிக்கு வலிக்கிறது. வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடம் பிடித்ததற்கு தண்டனையாக தமிழ்நாட்டுக்கு வேலை நாட்களை குறைக்கிறது ஒன்றிய அரசு. 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறாா் மேலும், மக்கள் தொகையை கட்டுப்பாடில் வைத்த தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளாா்.

தனது ஓனர் பாஜக செய்தது சரியென்றால் துணிச்சலாக வெளிப்படையாக” ஜி ராம் ஜி ”திட்டத்தை பழனிசாமி ஆதரிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், ஒன்றிய அரசு நிதியில் செயல்படுத்திய 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்துள்ளது என்றும் சாடியுள்ளாா்.
நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரி “பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்“ தனது ஸ்டைலில் “அழுத்தம்“ கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளாா் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. மக்களைக் காக்க குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை வெளியிட்டுள்ளாா் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாா்.


