சென்னை மாநகராட்சியில் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) சார்பில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் (National Urban Health Mission – NUHM) கீழ், மருத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026 ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவ மற்றும் நிபுணர் பணியிடங்கள்
மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் உயர் தகுதி பெற்றவர்களுக்காக பல்வேறு நிபுணர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Public Health Specialist – 1 இடம்
(சம்பளம்: ரூ.90,000)
Medical Officer – 15 இடங்கள்
(சம்பளம்: ரூ.60,000)
Assistant Public Health Specialist – 1 இடம்
(சம்பளம்: ரூ.60,000)
Veterinary Officer – 1 இடம்
(சம்பளம்: ரூ.53,000)
Microbiologist – 1 இடம்
(சம்பளம்: ரூ.40,000)
தகவல் தொழில்நுட்பம், சமூக நலன் சார்ந்த பணியிடங்கள்
Data Manager – 1 இடம்
(சம்பளம்: ரூ.26,000)
Psychiatric Social Worker – 1 இடம்
(சம்பளம்: ரூ.23,800)
Clinical Psychologist – 1 இடம்
(சம்பளம்: ரூ.23,000)
Occupational Therapist – 3 இடங்கள்
(சம்பளம்: ரூ.23,000)
Special Educator (Behavioural Therapy) – 1 இடம்
(சம்பளம்: ரூ.23,000)
செவிலியர், மருந்தாளர், உதவியாளர் பணியிடங்கள்
Staff Nurse – 107 இடங்கள்
(சம்பளம்: ரூ.18,000)
Auxiliary Nurse and Midwife (ANM) – 82 இடங்கள்
(சம்பளம்: ரூ.14,000)
Pharmacist – 4 இடங்கள்
(சம்பளம்: ரூ.15,000)
Ophthalmic Assistant – 2 இடங்கள்
(சம்பளம்: ரூ.14,000)
தொழில்நுட்பம், அலுவலக மற்றும் உதவிப் பணியிடங்கள்
Data Entry Operator – 46 இடங்கள்
(சம்பளம்: ரூ.13,500)
Lab Technician – 20 இடங்கள்
(சம்பளம்: ரூ.13,000)
X-Ray Technician – 7 இடங்கள்
(சம்பளம்: ரூ.13,300)
Operation Theatre Assistant – 5 இடங்கள்
(சம்பளம்: ரூ.11,200)
Therapeutic Assistant (Yoga & Naturopathy) – 4 இடங்கள்
(சம்பளம்: ரூ.15,000)
Multipurpose Worker (Yoga & Naturopathy) – 2 இடங்கள்
(சம்பளம்: ரூ.10,000)
Programme cum Administrative Assistant – 1 இடம்
(சம்பளம்: ரூ.12,000)
Multipurpose Assistant – 2 இடங்கள்
(சம்பளம்: ரூ.13,500)
Assistant cum Data Entry Operator – 2 இடங்கள்
(சம்பளம்: ரூ.15,000)
Office Assistant – 1 இடம்
(சம்பளம்: ரூ.10,000)
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்புவோர்,
https://chennaicorporation.gov.in, என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Member Secretary, CCUHM /
City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai,
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai – 600003.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2026
10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தகுதி பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு என்பதால், தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பழநியில் குவிந்த பக்தர்கள்…3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…


