- Advertisement -
புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப் பூ ரூ.850க்கும் கனகாம்பரம் ரூ.1000க்கும் பிச்சிப்பூ ரூ.130க்கும் அரளி ரூ.300க்கும் விற்பனையாகிறது. இந்த பூக்களின் விலை உயா்வு இன்னும் சற்று நாட்கள் நீடிக்கும் என வியாபாாிகள் தெரிவித்தனா்.
முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்


