Homeசெய்திகள்மாவட்டம்கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

-

- Advertisement -

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நிலையை ஆய்வு செய்துள்ளனர்.

we-r-hiring

முதலில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயால், கண்ணம்பாளையம் பகுதியில் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் விசாரணை முன்னேற்றங்களை கேட்டறிந்தார். சேகரிக்கப்பட்ட தடயங்கள், சந்தேகநபர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளுடன் அவர் விரிவாக ஆலோசித்தார். மேலும், எந்தவித தாமதமும் இல்லாமல் அனைத்து கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறுமியின் உடல் மீட்கப்பட்ட கண்ணம்பாளையம் குளம் பகுதியை பார்வையிட்ட அவர், குற்றவாளிகள் வந்திருக்கக்கூடிய பாதைகள் மற்றும் அங்கு கிடைத்த தடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கின் முன்னேற்றம் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தினார். இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும், சிறுமியின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…

MUST READ