எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது:- பொங்கலுக்குள் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் விஜயிடம் வந்துவிடுவார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது விஜய்க்கு பிளஸ்தான். சரத்குமார் மாதிரி ஜீரோ ஆகாமல் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் கையில் எடுத்து விஜய் மினிமம் கியாரண்டிக்கு போய்விட்டார். ஆனால் சீமான், எம்ஜிஆர் ஊழல் செய்தவர் என்று நேரடியாக எதிர்க்கிறார்.
இருந்தபோதும் எம்ஜிஆர் – ஜெயலலிதா மினிமம் கியாண்டி கொடுக்கும். அந்த வகையில் விஜயை பாராட்டுகிறேன். ஓபிஎஸ், டிடிவி உடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், திமுக மற்றும் தவெக கூட்டணி வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கிறது. கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கிறபோது தான் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியும்.

விஜய் தான் தனியாக வருவேனா? அல்லது கூட்டணியாக வருவேனா? என்பது சஸ்பென்ஸ் என்று சொல்கிறார். விஜயிடம் இதுவரை முஸ்தபாவை தவிர வேறு யாரும் போகவில்லை. மற்ற கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அவரிடம் செல்லலாம். ஆனால் பலம் நிரூபிக்காதவர்களிடம் யாரும் போக மாட்டார்கள். சர்வேக்களில் விஜய்க்கு பெரிய ஆதரவு இருப்பதாக காட்டுகிறார்கள். அதற்கு தகுதியானவரா விஜய்? அவரால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்த முடியுமா? களத்தில் இருப்பது சீமான் தான். ஆனால் பெரியாரின் பக்தர் என்று சொல்லும் விஜய், களத்திற்குள் வரவில்லை.
இதை கருத்துக்கணிப்பு நடத்துகிறவர்கள் சொல்வதில்லை. 2026ல் தனக்கும் திமுகவுக்கு இடையே போட்டி என்று சொல்வது விஜயின் கணிப்பு ஆகும். ஸ்டாலினை விஜயை கோபப்படுத்தி என்.டி.ஏ கூட்டணிக்கு தள்ளக்கூடாது என்று பார்க்கிறார். சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் அவர் அனுமதி வழங்கி விடுவார்.

தற்போது என்டிஏ மற்றும் அதில் உள்ள 11.4 சதவீதம் மட்டும் உள்ளது. மற்றவர்களின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. அதேபோல் அதிமுக கூட்டணியில் 23 சதவீதமும் ஒன்றாக இல்லை. உத்தேச பட்டியல் என்று வெளியானது பிரேமலதாவை அவமதிக்க எடப்பாடி செய்த நாடகமாகும். தற்போதும் சவுக்கு சங்கரை வைத்து அவருக்கு வாக்கு பலம் இல்லை என்று சொல்கிறார். உத்தேச பட்டியல் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு லாபம் தான்.
அவர் மு.க.ஸ்டாலினை தோற்கடிக்க அரசியல் செய்யவில்லை. 2வது இடத்தை தக்க வைக்க தான் அவர் அரசியல் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்டு வருபவர்கள் வரலாம். என்றைக்கு அண்ணாமலையை நீக்கிவிட்டு, பாஜகவை தன் பக்கம் விழ வைத்தாரோ, அன்றைக்கே இரண்டாவது இடம் நான்தான் என்று உறுதியாக எடப்பாடி உள்ளார்.

அமித் ஷா வருகையின்போது கூட்டணி ரெடியாகிவிடும் என்று சொல்லப்படும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரவில்லை. காரணம் லாபம் இல்லாமல் எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஓட் டிரான்ஸ்பரிங் கெப்பாசிட்டியோ, சீட் கன்வர்ட்டிங் கெப்பாசிட்டியோ கிடையாது. விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு சென்றபோதே அவருக்கு அந்த திறமை இல்லை என்பது தெளிவாகி விட்டது.
சீமான், எடப்பாடி பழனிசாமியை சேதப்படுத்தி வளர்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி எடப்பாடியை பலவீனப்படுத்த வருகிறார் விஜய். எனவே மற்ற கட்சிகள் எப்படி எடப்பாடி பழனிசாமியை நம்பி போவார்கள். எனவே உத்தேச பட்டியல் என்று சும்மா செய்தித்தாளில் எழுதலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


