அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாகததால், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை அடுத்த முறை சந்திப்பதாக கூறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


அமித்ஷாவின் தமிழக வருகை மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்டிஏ கூட்டணி ஆட்சி என்பதில், மிகவும் தெளிவாக உள்ளார். அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்தாலும், ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்பது தான் அவருடைய கருத்தாகும். அதனால் அதிமுக தரப்பில் பாஜக மீது சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கிறது. நாம் பெரும்பான்மை இடங்களில் வென்றாலும் ஆட்சியில் பங்கு கேட்பார்களோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருந்து கொண்டுள்ளது. அமித்ஷா தன்னுடைய பேச்சில் எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. அது அதிமுகவுக்கு தர்ம சங்கடமாக உள்ளது. அதிமுகவிடம் 50 இடங்களை வாங்குவதில் பாஜக உறுதியாக உள்ளது. தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க விரும்பவில்லை. அதேவேளையில், அவருக்கு பாஜக அணியில் இருந்து வெளியேறி தவெக கூட்டணிக்கு செல்கிற எண்ணமும் உள்ளது. அதை கட்சியினரிடம் சொல்லி எடப்பாடி நம்பிக்கையை ஏற்படுத்திவருகிக ஆனால் பாஜக தரப்பில் அதிமுகவை விடுகிற எண்ணம் கிடையாது. அமித்ஷா டெல்லியில் இருந்து வரும்போது வேலுமணி தொடர்பான பைல்களுடன் தான் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

புதுக்கோட்டையில் அமித்ஷா பேசியவை எதிர்பார்த்தது தான். ஆனால் மோடி தலைமையில் என்டிஏ ஆட்சி அமையும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியான விஷயம். அதனால் தான் அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது எடப்பாடி பழனிசாமி சொன்னார். அமித்ஷா முன்பாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ. தாமரை மலரும் என்று சொல்கிறார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிதான் காரணம் என்று சொல்கிறார். அதை நயினார் சொல்ல என்ன அவசியம் உள்ளது. எனவே அதிமுக, பாஜக, தவெக இடையே ஏதோ ஒன்று போய்க்கொண்டு இருக்கிறது. ஒருவேளை சிபிஐ விசாரணையை பயன்படுத்தி தவெகவை இழுக்க பார்க்கிறார்களா? என்று சரியாக தெரியவில்லை. ஆனால் தமிழிசை, நயினாரின் பேச்சு ஆகியவை ஏதோ ஒன்றை உணர்த்துகிறது.

அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாகாததால், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கவில்லை. இந்த சூழலில் வேலுமணி, அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவரை வைத்து டவுள் கேம் விளையாடலாமா? என்றும் பாஜக தரப்பில் யோசிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி பிரச்சினை செய்தால் வேலுமணி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை வைத்து, அதிமுகவில் மாற்றம் கொண்டு வரலாமா என்றும் யோசித்து வருகிறார்கள். தொகுதி பங்கீடு விவகாரத்தில் முதலில் பாஜக மக்களவை தேர்தலில் பாஜக அதிக வாக்குகளை பெற்ற 70 தொகுதிகளை கேட்டனர். பின்னர் 50 தொகுதிகளில் வந்து நிற்கிறார்கள். அதிமுக தரப்பில் 30 இடங்களை வழங்க தயாராக உள்ளதாக வேலுமணி மூலம் சொல்லப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். குறிப்பாக பாஜக கொங்கு மண்டலத்திலும், கன்னியாகுமரி போன்று அதிமுக வலுவாக உள்ள இடங்களில் அதிக இடங்களை கேட்கிறார்கள். அதிமுகவுக்கு அழுத்தம் தரும்விதமாக வேலுமணி மீதான எல்இடி பல்புகள் வாங்கியதில் மோசடி தொடர்பான வழக்கை கையில் எடுத்தார்கள். அதற்கு பலனாக வேலுமணி அமித்ஷாவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பாஜக உடன் செல்லலாம் என்கிறார்.

தவெக தரப்பில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் தங்களின் பக்கம் வருகிறபோது அதிமுக தாமாகவே பலவீனமாகிவிடும். அவர்களுக்கு ஏன் நாம் அரசியல் வாழ்வு அளிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். விஜய் விவகாரத்தில் கரூர் வழக்கு பெரிதாக எடுபடாது. திமுக மீது பழிபோடும்படி சிபிஐ அறிக்கை தர வேண்டும் என தவெக தரப்பில் சொல்கிறது. சிபிஐ தரப்பில் அதற்கு ஏற்றாற் போல் அறிக்கை தர வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக தரப்பில் சீட் ஓதுக்குவதில் 30-30-30 என்ற பார்முலாவை பின்பற்றுகிறார்கள். பாஜக தரப்பில் 50லிருந்து, 35 இடங்களுக்கு இறங்கிவந்து விட்டார்கள். சில தொகுதிகள் பிரச்சினையாக இருப்பதால் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை. டிடிவி தினகரன், பொதுக்குழுவில் மக்களுக்கு நல்லாட்சி தருபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்று தினகரன் கூறியுள்ளார். தினகரனும், அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் தேர்தலில் ஏற்றம் பெறக்கூடாது என்று நினைக்கிறார்கள். தினகரன், ஓபிஎஸ்-ஐ தவெகவில் தள்ளிவிடுவது தான் அண்ணாமலை செய்கிற வேலையாகும். தேமுதிகவில் திமுகவிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


