அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை டாஸ்மாக்குக்கு தான் செல்லும் என பாமக தலைவா் அன்புமணி கூறியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி–டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும். நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டணி வைப்பவர்கள் அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார்.
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திருப்பூரிலும் கலவலரத்தை தூண்டும் முயற்சி – ஐஜியிடம் புகார்



