spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுSIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…

SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…

-

- Advertisement -

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்கான கால அவகாசத்தை 20 நாட்கள் நீட்டித்து உத்தரவிட கோரி தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக… கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 19ம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்பட்டனர். டிசம்பர் 19ம் தேதி முதல் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்கள் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்கான கால அவகாசத்தை ஜனவரி 30ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்து வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் ஒரு பகுதியாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளின் கால அவகாசத்தை கூடுதலாக 20 நாட்கள் நீட்டித்து வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் காரணமாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக வெற்றி கழகம் முன் வைத்துள்ளது.

”N-ஜென்” – இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…

we-r-hiring

MUST READ