spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று (19.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டர் (Hydrogen Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலா (வயது 55) க/பெ.பரமசிவம் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் வரும் 18 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் பலூன் கடை உரிமையாளா் ஏழுமலை மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது தொடா்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…

MUST READ