spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்பிடம் அடி பணிந்த மோடி! ஜெகத் காஸ்பர் நேர்காணல்!

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்பிடம் அடி பணிந்த மோடி! ஜெகத் காஸ்பர் நேர்காணல்!

-

- Advertisement -

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்காக மத்திய அரசு பல்வேறு சமசரங்களை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று பாதிரியார் ஜெகத் காஸ்பர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

'The Rise- Ezhumin' - 14th Conference 2025 will be held in January

we-r-hiring

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்து பாதிரியார் ஜெகத் காஸ்பர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- அமெரிக்கா, இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைத்து இருப்பது நம்முடைய நாட்டின் வணிகர்கள் பார்வையில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சியான செய்தி தான். அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித்துறை, காலணி உற்பத்தி துறை, ஐ.டி, கடல் உணவு சார்ந்த துறை, சிறிய அளவிலான உற்பத்தி துறை ஆகிய 5 துறைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர மக்கள் லட்சக்கணக்கானோரின் வாழ்வோடு தொடர்புடைய துறைகள் இவை. ஒப்பீட்டளவில் போட்டியிடும் தன்மை இன்னும் நமக்கு சவாலாக தான் இருக்கும். ஆனாலும் அமெரிக்க சந்தை என்பது மிகவும் முக்கியமான உலகச்சந்தையாகும். எனவே வரிவிதிப்பு குறைப்பு என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டதால் அமெரிக்கா சார்ந்த முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறி தொடங்கியது. அதன் காரணமாகவே கடந்த 8 மாதங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்திக்க தொடங்கியது. தற்போதைய நிலை தொடர்ந்தால், ரூபாயின் மதிப்பு இன்னும் பலவீனப்பட்டிருக்கும். அதுவும் நமது பொது பொருளாதார ஆரோக்கியத்திற்கு சவாலானதாக இருந்திருக்கும். எனவே பல ஸ்டார்ட் அப் தொழில்கள், முதலீடு சார்ந்த தொழில்கள் ஓரளவுக்கு நம்பிக்கை பெறுகின்ற சூழல் உருவாகும்.

இவை தான் அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள். இன்றைய உலக ஒழுங்கை இண்டாம் உலகப் போருக்கு பின்னர், போரில் வென்ற அமெரிக்கா தலைமையிலான பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உருவாக்கின. இந்த உலக ஒழுங்கு தங்களுக்கு எதிராக திரும்புகிறது என்கிற உணர்வு நீண்ட காலமாகவே பழைய காலனி ஆதிக்க நாடுகளுக்கு உள்ளது. எனவே தாங்கள் உருவாக்கிய உலக ஒழுங்குகளை மறுவரையறை செய்ய அவர்கள் புறப்படுகிறார்கள். இதுதான் அடிப்படையாகும்.

இதில் பெரிய உலக சக்திகளாக எழுந்து நிற்பது அமெரிக்கா, சீனா. நடுத்தர சக்திகளாக இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில். இந்த நாடுகளின் கூட்டமைப்பாகிய பிரிக்ஸ், டாலருக்கு மாற்றாக ஒரு புதிய நாணயத்தை அறிமுகம் செய்ய முயன்றன. டாலரின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் நடவடிக்கையில் யார் இறங்கினாலும் அவர்களை அமெரிக்கா அழித்து ஒழித்துவிடும். எனவே இந்த உலகம் மறுவரையறை ஆகிறபோது புதிய புவிசார் அரசியல் சக்திகளை மட்டுப்படுத்த வேண்டும் என்கிற அணுகுமுறைக்கு அவர்கள் வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட்டில் 23 ஆண்டுகளாக இந்தியா முதலீடு செய்து வந்த சபஹார் துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளில் அதுவும் ஒன்று.

இதன் மூலம் ஈரானுடனான உறவை விட்டுக்கொடுக்க இந்தியா தயாராகி உள்ளது. அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் குறைத்துக்கொண்டிருக்கிறது. பட்ஜெட்டில் சுங்க வரியை மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வரிகளை குறைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையாகும். வேளாண் துறையில் அமெரிக்காவை அனுமதித்தால், தேர்தல் பாதிப்புகள் வரும் என்று மோடி அரசு அவ்வளவு எளிதில் உடன்படாது.

சீனா உடன், பிரிக்ஸ் நாடுகளும், ஈரானும் இணைந்தால் அமெரிக்காவின் உலக தலைமை துவத்துவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை முன் கணித்து தான் அமெரிக்கா முன் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வேறு வழியில்லாமல் இந்தியா தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை அமெரிக்க வரிவிதிப்பால் முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த உயர்சாதியினர், அமெரிக்காவில் அதிகளவில் உள்ளனர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்படுகிறபோது, அவர்களுடைய நலன்கள் பாதிக்கப்படும்.

மத்திய பாஜக அரசுக்கு, தங்களை அமெரிக்கா கார்னர் செய்கிறது என்பது நன்றாக புரிந்துவிட்டது. சரணடைவது தான் ஒரே வழி என்பதால் அவர்கள் அப்படி செய்துவிட்டனர். 140 கோடி மக்கள் வாழ்கிற ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பாதிக்கு பாதி அதானி, அம்பானி என்கிற 2 தனிநபர்களிடம் உள்ளது. அதானிக்கு எதிரான வழக்கு அமெரிக்காவில் உள்ளது. இவற்றில் அவருக்கு நெருக்கடி வந்துவிடக்கூடாது என்கிற அச்சம் உள்ளது. எனவே ஏதோ சமரசம் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ