spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

-

- Advertisement -

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கோவிந்தபுரம் ஊராட்சி மாந்தியாபுரம் பகுதியில் பட்டக்கார தோட்டத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி (65). இவரது மனைவி பாலாமணி (56). இருவரும் நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 11 மணியளவில் திடீரென வீட்டின் கதவை தட்டி, “அம்மா தண்ணீர் குடுங்க” என்று சிலர் கேட்டுள்ளனர். உடனே, பாலாமணி மெதுவாக எழுந்து கதவை திறந்துள்ளார். அப்போது முகத்தில் துணி சுற்றியிருந்த 5 மர்ம நபர்கள் கத்தி, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். அவர்கள் கதவை பலமாக தள்ளியதில் பாலாமணி கீழே விழுந்தார்.

அவரது சத்தம் கேட்டு எழுந்த கோவிந்தசாமி, வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருவரையும் மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் பாலாமணியின் கழுத்தில் இருந்த நகை, காதில் இருந்த தோடுகளை பறித்தனர். மேலும், கத்திமுனையில் மிரட்டி பீரோ சாவியை கேட்டதில் பயந்த கோவிந்தசாமி, அதை கொடுத்தார்.

we-r-hiring

பின்னர் பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலறிந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் ஆம்புலன்சில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

கேரளாவில் பரபரப்பு – காங்கிரஸ் மாநில செயலாளர் கைது

 

MUST READ