மதுபான வழக்கில் முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் கலால் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான மணிஸ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்துள்ளது.
இதனிடையே சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மணிஸ் சிசோடியா மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி எம்.கே நாக்பால் கடந்த 26ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், சில காரணங்களால் இன்றைய தினத்திற்கு உத்தரவு மாற்றப்பட்டிருந்த நிலையில் மணிஸ் சிசோடியாவுக்கு சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.


