Homeசெய்திகள்ஆவடிஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? - பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

-

- Advertisement -

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று மக்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? - பீதியில் திமுக நிர்வாகிகள்கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மாவட்ட செயலாளரும் மண்ணின் மைந்தருமாகிய ஆவடி சா.மு.நாசர் போட்டியிட்டு 1395 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 1,06, 669 வாக்குகளையும் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.  ஆவடியில் வெற்றி பெற்ற பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அவருடைய காலம் ஆவடியின் பொற்காலம் என்று கூறலாம்.

அதன் பின்னர் 2021 நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் 1,50,287 வாக்குகள் பெற்று 55,275 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியராஜனை தோற்கடித்தடித்தார். வெறும் 95,012 வாக்குகளை மட்டுமே பாண்டியராஜன் பெற்றார்.ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? - பீதியில் திமுக நிர்வாகிகள்சா.மு.நாசர் வெற்றி பெற்றதும் பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் அந்தப்பதவியில் நீடித்தார். அதன்பிறகு முதலமைச்சரால் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓராண்டு கழித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

we-r-hiring

தற்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மீண்டும் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆகிய இருவர்களில் ஒருவர் போட்டியிட்டால் தேர்தல் களம் கடுமையான போட்டியாக இருக்கும். ஆனால் போட்டியிடுவார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் பெரும் தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களை நம்பி பல கம்பெனிகள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டால் அது தொழில் நிறுவனத்திற்கு  பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேர்தல் களம் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டதாக பாண்டியராஜனை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமும் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் செலவாகும். அப்படியே செலவு செய்தாலும் வெற்றிப்பெற முடியுமா என்கிற அச்சம் அவருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? - பீதியில் திமுக நிர்வாகிகள்திமுக தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலைப்போல் இந்த தேர்தலிலும் வலுவாக இருக்கிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதால் அதிமுகவிற்கு வழக்கமாக வாக்களிப்பவர்கள் கூட தற்போது அளிப்பார்களா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் ஆவடி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி வாக்காளர் ஒருவரிடம் பேசும் போது, 2016 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன், ஆவடியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார். பட்டாபிராம் மேம்பாலம், பட்டாபிராம் டைட்டில் பார்க், சேக்காடு இரயில்வே சுரங்கப்பாதை, தாலுகா அலுவலகம்,  பருத்திப்பட்டு பசுமை பூங்கா என்று  ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து ஆவடி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்று இருக்கிறார். அவர் மீண்டும் போட்டியிட்டால் கட்சி வேறுபாடு இல்லாமல் அவருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.

எது எப்படியோ அதிமுக போட்டியிடாமல் திமுக – பாஜக நேருக்கு நேர் போட்டியிட்டால் ஆவடி சா.மு.நாசர் செலவு செய்யாமல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சை: தர்மசங்கடத்தில் அதிமுக தலைமை!

MUST READ