ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.
இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். இஸ்லாமியா்களுக்கு என்றும் அரணாக திமுகவும், திராவிட மாடல் அரசும் இருந்து வருகிறது.
உங்களில் இருந்து பிாிக்க முடியாத சொந்தமாக, உறவாடும் அன்போடு இஸ்லாமியா்களுக்கு நல்வாழ்த்துகள். மதசாா்பின்மைச் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்பட்டு வருகிறோம்.

இஸ்லாமியா்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் போதெல்லாம் கடுமையாக எதிா்க்கிறோம். “எல்லோருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் திமுக அரசு அனைவரின் பாதுகாப்பு, உாிமைகளை உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறை நிகழ்கிறது. பிற மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாக திகழ்கிறது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!
