தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் நிலவும் கண்ணியமற்ற விமர்சனங்கள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”என் குடும்பத்தைப் பற்றி பேசும்போது மௌனம் ஏன்?”
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இருப்பவர்கள் தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகச் சீமான் குற்றம் சாட்டினார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ”தவெகவில் இருப்பவர்கள் என்னை, என் குடும்பத்தை மற்றும் நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசுனார்கள். இப்படிப்பட்ட சூழலில், உங்கள் தொண்டர்களிடம் ‘கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்’ என்று நீங்கள் (விஜய்) ஒரு அறிக்கை விட்டிருக்க வேண்டும்.”
டிஜிபி அலுவலகம் சென்றது குறித்து விமர்சனம்
பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கள் தொடர்பாக விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததைச் சுட்டிக்காட்டிய சீமான், “அப்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது டிஜிபி அலுவலகம் சென்று புகார் அளிக்க உங்களுக்கு என்ன தகுதியும் நேர்மையும் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும், “உங்கள் ரசிகர்கள் மற்றவர்களை இழிவாகப் பேசும்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? இதை வைத்து நான் உங்கள் மீது புகார் அளிக்கவா?” என்றும் அவர் ஆவேசமாக வினவினார். தமிழக அரசியலில் ‘தம்பி’ என்று விஜயை அழைத்து வந்த சீமான், தற்போது நேரடியாக விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? – விளாசிய பொன்ராஜ்
