தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தமிழ்நாட்டில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்பட்டு, மே 4-ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.
மாலை 5 மணி வரை 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். குறிப்பாக சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் எனத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளாா்.
கடந்த 2021-ல் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.06% வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 82.24% பதிவாகியுள்ளது. இரண்டுக்குமான வித்தியாசம் கிட்டத்தட்ட 19.18% . இன்றும் குறைந்த பட்சம் 5-6% வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் தமிழக வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்க வாய்ப்புள்ளது.
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
