Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக -  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்

தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக –  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்

-

- Advertisement -

தமிழ்நாடு அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளாா். மேலும், கலைஞரின் 103வது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக -  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின்  தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இன்றும் திமுகதான் உள்ளது” என்று வலியுறுத்திய அவர், ஜூன் 3-ஆம் தேதியை “புத்தெழுச்சி நாள்” ஆகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

we-r-hiring

அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் திரண்டு வரும் திமுக உடன்பிறப்புகளின் உற்சாகம் தான் தமக்கு புதிய ஊக்கத்தை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை தாண்டிய கழக உணர்வே திமுகவின் உண்மையான வலிமை என்றும், வெற்றி வந்தாலும் ஆணவப்படாமல், தோல்வி வந்தாலும் துவளாமல் இருப்பதே கலைஞர் கற்றுத் தந்த அரசியல் பண்பாடு என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் திமுக இயக்கத்தை வழிநடத்திய கலைஞர், வெற்றியிலும் தோல்வியிலும் ஒருபோதும் தளராத தலைவர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே திமுக மேலும் வேகமாக மக்களிடம் திரும்பிச் செல்லும் இயக்கமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; இனம், மொழி மற்றும் சமூகநீதிக்காக போராடிய இயக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்மொழிக்காக உயிர் தியாகம் செய்தோரின் வரலாறும், தமிழ்நாட்டின் உரிமைக்காக சிறை சென்ற தலைவர்களின் பாரம்பரியமும் திமுகவின் அடையாளம் எனக் கூறியுள்ளார்.

மேலும், திமுக அமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், அனைத்து உடன்பிறப்புகளின் பங்களிப்பும் வெளிப்படும் வகையில் கழக அமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “கழகத் தலைவராக இருந்தாலும், நானும் கலைஞரின் உடன்பிறப்புதான்; முதன்மைத் தொண்டனாகவே என் பணியை தொடர்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கருப்பு-சிவப்பு கொடிகள் ஏற்றப்பட வேண்டும் என்றும், ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு உதவும் நலத்திட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், திமுக வளர்ச்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கும் முன்னோடிகளுக்கும் உதவும் வகையில் விழாக்கள் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் கலைஞரின் சாதனைகள் மற்றும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய அவரது பங்களிப்புகளை காணொளிகளாக பரப்புமாறும் இளைஞர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாக, “திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது; என்றும் தொடரும்” என்று உறுதியேற்போம் என்றும், “தமிழ்நாட்டின் நலனுக்காக மேலும் அதிகமாக உழைப்போம்” என்றும் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

MUST READ