முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க” முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாநகராட்சியில் எழுந்துள்ள ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மாநகராட்சியின் கழிவுநீர் கால்வாய் திட்டங்களை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

மதுரையில் மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட குவாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் மக்கள் அமைதியையே விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைகளே தொடரும் என்றார். திருப்பரங்குன்றத்தில் அமைதியை குலைக்கும் எந்தவொரு மதவாத சக்திக்கும் இடமளிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
முதல்வர் செய்தியாளர்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றும், தேவையான நேரங்களில் மட்டுமே அவர் ஊடகங்களை சந்திப்பார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். மேலும், முதல்வர் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி தொடர்பான ஹார்டு டிஸ்க் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விசாரணை முடிவில் உண்மை வெளிவரும் என்றும், ஹார்டு டிஸ்க் திருடப்பட்டது குறித்து செந்தில் பாலாஜி கூறியதாக யாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
ரூ.634 கோடி லஞ்சப் புகார் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…
