Homeசெய்திகள்மாவட்டம்தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டியும், கையில் சட்டி ஏந்தியும் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

we-r-hiring

அதேபோல், “விவசாயத்தை விட விளையாட்டு கடினம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகளின் உழைப்பை இழிவுபடுத்தும் வகையிலான இதுபோன்ற கருத்துகளை அரசு பொறுப்புடன் அணுக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

MUST READ