Homeசெய்திகள்தமிழ்நாடு"மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்" – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி....

“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார்."மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்" – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!

 

we-r-hiring

​இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காரசாரமான அறிக்கை விபரம் பின்வருமாறு,

​6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கட்டாயம்: சர்வாதிகாரப் போக்கு
​கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மதம் மற்றும் மொழியை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்ற ஆர்எஸ்எஸ் கொள்கையை நோக்கியே கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு செயல்படுகிறது. ​இந்தியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசுப் பள்ளிகளில் படிக்கும் சூழலில், மாநிலங்களின் கடுமையான எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் சர்வாதிகார மனப்பான்மையுடன் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது. அதன்படி, நடப்பு (2026-2027) கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​மறைமுக இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு
​இதுவரை சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழுடன் மூன்றாவது மொழியாகப் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்பட்டன. இது உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்களுக்கு உதவியது. ஆனால், தற்போது மூன்றாவது மொழி இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டும்தான் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதால், மறைமுகமாக இந்த இரு மொழிகளையும் படிக்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ​மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட, மூன்றாவது மொழியாக அந்தந்த மாநில மொழியை வைக்க பாசிச மோடி அரசுக்கு மனமில்லை; மாறாகச் சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர்."மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்" – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!​தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இருமொழிக் கொள்கையே காரணம்
​மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்குப் பேரழுத்தத்தையும், சுமையையும் ஏற்படுத்தும் என்பது உலகளாவிய கல்வியாளர்களின் கருத்து. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. ​”முன்னாள் பிரதமர் நேருவின் உறுதிமொழிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் பாதுகாத்தது. ஆனால், தங்களின் குறுகிய அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்கிறது.”"மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்" – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!​தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை, ஒரு மொழியை விருப்பப் பாடமாகப் படிப்பதில் தவறில்லை; ஆனால் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே, சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பள்ளிக் கல்வியை முழுமையாக மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும். இதையும் மீறி இந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால் மோடி அரசு அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரித்துள்ளார்.

இளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் – நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!

MUST READ