Homeசெய்திகள்தமிழ்நாடுபல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

-

- Advertisement -

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை இணைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தெரிவித்துள்ளது. இது முந்தைய அரசுகளின் மாநில உரிமைக்கான நீண்டகாலப் போராட்டப் பின்னடைவாக அமைந்துவிடும் என்றும் சிபிஎம் எச்சரித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

​இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ​”பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் யுஜிசி பரிந்துரைக்கும் நபரை இணைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல. இது, நீண்டகாலமாக உயர்கல்வியில் ஒன்றிய அரசு அத்துமீறித் தலையிடுவதற்கும், மாநில அரசின் அதிகாரங்களைப் புறந்தள்ளி ஆளுநர் செயல்பட முனைவதற்கும் எதிரான முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். ​தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்து, மாநில அரசுக்கே வழங்கும் சட்டம் ஆளுநரால் நீண்டகாலம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், உச்ச நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

we-r-hiring

​ஆனாலும், பொதுநல வழக்கு ஒன்றின் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு அது உள்ளானது. பிறகு உச்ச நீதிமன்றம் அத்தடையை நீக்கினாலும், உயர் நீதிமன்ற வழக்கு முடிகிற வரை துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்வதில்லை என்ற உறுதிமொழியைத் தமிழ்நாடு அரசு தந்திருந்தது. இதனால் சட்டம் அமலாகாமலும், துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமலும் உயர்கல்வித் துறை பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உண்மைதான்.”பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

​”சங்கப் பரிவாரங்களின் ஊடுருவலுக்கு இடம் தரக் கூடாது”
​”இதற்கான சட்டத்தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும் என்றாலும், அத்தகைய தீர்வு ஒன்றிய அரசின் அத்துமீறிய தலையீட்டுக்கு வழிவகுப்பதாகவோ, ஆளுநருக்கு வாய்ப்பு தருவதாகவோ அமைந்துவிடக் கூடாது. ​கல்வியில் சித்தாந்த ரீதியில் ஊடுருவ முனையும் சங்கப் பரிவார முயற்சிகளைத் த.வெ.க அரசு அனுமதித்துவிடக் கூடாது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உறுப்பினரைத் தேடல்குழுவில் இணைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சங்கப் பரிவார ஆட்களின் கைகளில் உயர்கல்வியைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டதே ஆகும்.”

​அமைச்சரின் பேச்சுக்கு முரண்படும் அரசின் செயல்முறை
​”தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றியுள்ள முடிவுக்கு எதிராகக் கருத்து கூறும்போது, ‘கல்வி முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ​ஆனால், தற்போதைய துணைவேந்தர் நியமனப் பிரச்சினையில் மாநில அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு, ‘மாநிலப் பட்டியலில் கல்வி’ என்னும் அமைச்சரின் முற்போக்கான நிலைப்பாட்டையே முற்றிலும் நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது.”பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

​சட்டப் போராட்டத்தைத் தொடர சிபிஎம் வலியுறுத்தல்
​”பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி வரம்பு என்பது கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதாகவே இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களிலும் உரிமைகளிலும் தலையிடுவதாக இருக்க முடியாது. ​ஆகவே, இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க மறுக்கிற ஒன்றிய அரசாங்கம், பின்புற வாசல் வழியாகத் தனது பிற்போக்குத்தனங்களை அமல்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். சட்டப் போராட்டத்தில் ஏற்கெனவே அரசு எடுத்துள்ள அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தற்போதைய த.வெ.க அரசும் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று பெ. சண்முகம் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

MUST READ