Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: "விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே...

டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”

-

- Advertisement -

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ‘ஞானபீட விருது’ பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வைகோ

we-r-hiring

​டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சந்திப்பு:
​டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

​மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்த்து உரை:
​வைரமுத்துவின் பிறந்தநாளும் இன்று என்பதால், அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்த இந்தத் தருணத்தில் வைகோ வாழ்த்துக் கடிதம் மற்றும் உரையில் குறிப்பிட்டதாவது:

“உங்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் இன்னும் எண்ணற்றப் பிறைகளைக் காணும் வகையில் நீங்கள் முழுமையான உடல்நலனோடும், கவிதையும், காவியமும் படைக்கும் ஆற்றலோடு நெடுங்காலம் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.

​உங்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டதன் மூலம், ஞானபீட விருதுக்கே ஒரு புதிய மரியாதையும், பெருமையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.”
​இலக்கிய உலகில் மிக உயரிய அங்கீகாரமான ஞானபீட விருதை வைரமுத்து பெற உள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்த இரு ஆளுமைகளின் சந்திப்பு தமிழ் நெஞ்சங்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ