வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 02) செயல்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்த விடுமுறை உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி, அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மழைக்காலத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
