- Advertisement -
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசின் முன் அனுமதி பெறாமலேயே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்த நீதிமன்றம், இதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி மறுத்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
இந்த உத்தரவு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் விசாரணை நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
