spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!

-

- Advertisement -

 

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
Photo: ANI

ஒடிஷா ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும் டும்! .

56 விரைவு ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் மூன்றாவது நாளாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து இரண்டு நாட்களில் ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும்; பாகநக பஜார் ரயில் நிலையத்தில் இரண்டு மெயின் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் இணையும் ராட்சசன் பட கூட்டணி!

அதேபோல், ரயில் விபத்துக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 05) இயக்கப்படுகிறது. காலை 07.00 மணிக்கு சென்னையில் இருந்து ஷாலிமாருக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் காலை 10.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ