கடந்த ஆண்டு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த ஆண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆவடியில் மழை பெய்தால் ஸீராம் நகரில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதை கடந்த காலத்தில் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால், தற்போது அந்த பகுதி முழுவதும் நீர் வடிந்து காணப்படுகிறது.
கடந்த காலத்தில் மழை பெய்தால் ஆவடி ஸீராம் நகரில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கும். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-22 ஆண்டு ஆய்வு செய்து கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்தினார். அந்த நகர் முழுவதும் தற்போது தண்ணீர் தேங்காமல் வடிந்து காணப்படுகிறது.

அதேபோன்று ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீரை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர், ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், மேயர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்றினர். அதேபோன்று திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், போன்ற பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை மின் மோட்டார் வைத்து நீரை அகற்றி வருகின்றனர்.
மேலும் ஆவடி சின்னம்மன் கோயில் அருகே உள்ள சரஸ்வதி நகரில் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மழைநீர் கடந்த ஆண்டைவிட தற்போது மழைபெய்து நின்ற ஒரு சில மணி நேரத்தில் மழைநீர் முற்றிலும் வடிந்து விடுகிறது.தற்போது அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஒரு சிரமும் இல்லாமல் மழை காலங்களை கடக்க முடிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


