spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்து.....மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை!

முதலமைச்சரின் குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்து…..மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்து.....மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை!

we-r-hiring

தமிழக முதலமைச்சரின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் Nellaiboy 143, jd arown, smart smart 987 ஆகிய மூன்று வெவ்வேறு ஐடிகளில் இருந்து தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் குறி வைத்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்கள் பகிரப்படுவதாக சமூக ஊடகப்பிரிவின் காவலர் டேனியல் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாநாடு நடத்தி கட்சித் தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன்…..ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்!

புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி நற்பெயரை அவமதித்தல், பெண்ணின் நாகரீகத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அந்த நபரின் ஐடிக்களை உருவாக்கிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

MUST READ