spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு!

அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு!

-

- Advertisement -

 

அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு!

we-r-hiring

பெங்களூருவில் ஏழை விவசாயி ஒருவரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!

பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழுக்கு உடையுடன் துணி மூட்டை சுமந்து விவசாயி ஒருவர் வந்துள்ளார். அவரை உள்ளே விட மறுத்த பாதுகாவலர்கள் வெளியே செல்ல வற்புறுத்தினர். இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் விவசாயியை மெட்ரோ ரயிலில் பயணிக்க மெட்ரோ நிறுவனத்தினர் வேறு வழியின்றி அனுமதித்தனர்.

இது தொடர்பான காணொளி வெளியான நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!

இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

MUST READ