- Advertisement -
விராலிமலை அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாடு முட்டியதில் படுக்காயம் அடைந்துள்ளாா்.
விராலிமலை அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், கலெக்ஷன் பாயிண்டில் பணியில் இருந்த விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்(56) விலாவின் மீது மாடு முட்டியதில் படுக்காயம் அடைந்துள்ளாா். அவருக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே தீர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்