Homeசெய்திகள்தேர்தல் 2026ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் - தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி

ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி

-

- Advertisement -

ஆம் ஆத்மி கட்சியில் ​நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் - தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடிஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே முடங்கிக் கிடப்பதாகவும், கட்சியின் உள்மட்ட ஜனநாயகம் நசுக்கப்படுவதாகவும் ராகவ் சதா குற்றம் சாட்டியுள்ளார்.

 

we-r-hiring

​ஊழலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆத்மி கட்சி, தற்போது தனது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். கட்சியின் முக்கிய விவகாரங்களில் இருந்து தகுதியுள்ள தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், “யெஸ் மேன்” (சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்கள்) கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும் ராகவ் சதா குறிப்பிட்டுள்ளார்.​

​ராகவ் சதாவின் விமர்சனங்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மூத்த தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்துள்ளனர்.​ ராகவ் சதாவின் இந்த அதிருப்தி கொள்கை சார்ந்தது அல்ல, மாறாக அவருக்குப் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட தனிப்பட்ட ஏமாற்றம் என்று கட்சி விமர்சித்துள்ளனர். ​கட்சியின் தலைவர்கள் சிறையில் இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் ராகவ் சதா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ​மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் எவர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமை எச்சரித்துள்ளது.

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

 

MUST READ