Homeசெய்திகள்தேர்தல் 2026தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

-

- Advertisement -

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநதி எம்.பி காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது, “ராகுல் காந்தி தேர்ந்தெடுத்து முதல்வர் தளபதி தேர்ந்தெடுத்து அவருடைய ஆசி பெற்ற வேட்பாளர் சங்கை கணேசனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்களிக்க வேண்டும். தளபதி அவர்களுடைய பெயரை சொல்லித்தான் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.

we-r-hiring

மகளிர் உரிமைத் தொகையை தந்தவர் அண்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தத் தேர்தல் முடிந்தவுடன் நமது ஆட்சி தான் அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மகளிர் உதவித் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த தேர்தலுக்குப் பிறகு மகளிர்களுக்கு 8000 ஆயிரம் ரூபாய் டோக்கன் வழங்கப்படும். உங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கிரைண்டர் வாஷிங் மெஷின் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு உங்களுக்காக நமது முதல்வர் 8000 ரூபாய் கூப்பன் வழங்குகிறார். இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் 20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க வாக்குறுதியை முதல்வர் தந்திருக்கிறார். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்துக் கொண்டிருக்கிறது.

எல்லா மழை காலத்தில் புயல் காலத்தில் கூட நிவாரணம் தராத மத்திய அரசாங்கத்திடம் கூட்டணி வைத்துள்ள பழனிசாமி எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை வளர்ந்த பொருளாதாரம் மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய முதல்வர். வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட தமிழ்நாடு. வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு இப்படி எல்லா விதத்திலும் முன்மாதிரியாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.

பிஜேபி மோடி திட்டத்திற்கு பெயர் மட்டும் தான் வைப்பார்கள் காசு கொடுக்க மாட்டார்கள். பிரதம மந்திரி வீடு கட்டக்கூடிய திட்டத்துக்கு 61 சதவிகிதம் நாம் வழங்குகிறோம். 31 சதவீதம் மோடி கொடுக்கிறார். பெயர் மட்டும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம். தன்னுடைய பெயரை ஸ்டிக்கரை மட்டும் ஒட்டக்கூடிய ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்துள்ள பழனிச்சாமிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

தொடர்ந்து ஹிந்தியை திணித்துக் கொண்டு உரிமையை பறிக்கக்கூடிய, தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமும் செய்யாத, நம்முடைய பெருமைகளை எல்லாம் மறக்கக்கூடிய, அந்த டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தேர்தல்தான் இந்த தேர்தல் என முதல்வர் கூறியிருக்கிறார்.

எனவே தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கு உண்டான தேர்தலில் அவர்களுக்கு சரியான படத்தை புகட்ட வேண்டும். சங்கை கணேசனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநதி கூறியுள்ளாா்.

உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …

 

MUST READ