Homeசெய்திகள்தேர்தல் 2026“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

-

- Advertisement -

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின் புதிய முயற்சி இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளும் முயற்சியாக அமைந்ததுள்து குறிப்பிடத்தக்கது.

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

we-r-hiring

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை வேகமெடுத்து வரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

‘டீ வித் தமிமுன் அன்சாரி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சி, சிதம்பரம் தொகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி மற்றும் தொகுதி மேம்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிமுன் அன்சாரி விரிவாக பதிலளித்தார்.

மாணவர்களின் கல்வி தேவைகள் குறித்து பேசுகையில், சிதம்பரத்தில் சட்டக் கல்லூரி அமைப்பது அவசியம் என வலியுறுத்திய அவர், சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே இதற்காக குரல் எழுப்புவேன் என்று உறுதியளித்தார். மேலும், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் குறித்து தனது எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வு, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொண்டு, அவர்களுடன் உறவு ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்தது. சமூகநீதி மற்றும் வளர்ச்சி ஆகிய இரு தளங்களிலும் சிதம்பரம் தொகுதியை முன்னேற்றம் செய்ய வேண்டும் என்ற தனது நோக்கத்தையும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

மொத்தத்தில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறையாக மட்டுமின்றி, இளைஞர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

MUST READ