Homeசெய்திகள்தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

-

- Advertisement -

சென்னை ராஜமங்கலத்தில் 4 மாத ஆண் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.தாய்பால் ஊட்டிய நிலையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு!

சென்னை ராஜமங்கலம் சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அவரது மனைவி பிரியங்கா இவர்களுடைய நான்கு மாத ஆண் குழந்தைக்கு நேற்று இரவு தாய் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியுள்ளார். குழந்தை தூங்கிய நிலையில் இருந்ததால் படுக்கையில் கிடத்தியுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் குழந்தை இடம் எந்த அசைவும் இல்லாமல்  இருந்ததால் சந்தேகம் அடைந்த தாய் பிரியங்கா குழந்தையை எழுப்பியுள்ளார். குழந்தை மூச்சு பேச்சு இன்றி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரியங்கா மற்றும் தந்தை கார்த்திக் இருவரும் பெரியார் நகர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்பொழுது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்  குழந்தை ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குழந்தை இறந்ததது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு  வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாய்ப்பால் குடித்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நான்கு  மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

 

MUST READ