இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன் (36). தனியார் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் ,4 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு குடிதண்ணீர் கேன் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத கார், இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனகம்மா சத்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது 4 மாத கைக்குழந்தை உள்ள நிலையில் அமுதன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.