ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம்” (ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி. ) வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை சுற்றி திாிந்து கொண்டிருந்ததது. இதனை பிடிக்க பல பகுதிகளில் கூண்டுகளை வனத்துறை அதிகாரிகள் அமைத்தனா். இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் பொருத்திய சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப்புலி இருப்பது தெரிந்தது.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் மேலும் இரண்டு கூண்டுகளை அமைத்தனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவு சிறுத்தை கூண்டில் பிடிபட்டதாக மேடக் மாவட்ட துணை வன அதிகாரி ஸ்ரீதர் ராவ் தெரிவித்தார். பிடிப்பட்ட சிறுத்தையை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் சில நாட்கள் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தாா்கள்.