Homeசெய்திகள்'24 மணி நேரத்தில் வெள்ளை அறிக்கை'- அண்ணாமலை

’24 மணி நேரத்தில் வெள்ளை அறிக்கை’- அண்ணாமலை

-

- Advertisement -

’24 மணி நேரத்தில் வெள்ளை அறிக்கை’- அண்ணாமலை

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணிநேரத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஸ்வகர்மா திட்டத்தில் மக்களுக்கு பிரதமர் வழங்க உள்ள கடனை கி.வீரமணி விரும்பவில்லை என்றால் அவர்கள் கொள்கையின்படி வந்திருக்கிற மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை உருவாக்க கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்ற முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணிநேரத்தில் வெளியிடப்படும்.

பாஜக சார்பில் 24 மணி நேரத்தில் தமிழகத்திற்காக மத்திய அரசு வழங்கிய ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியை துறை ரீதியாக ஒதுக்கீடு செய்த பட்டியல் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும், அதனை முதல்வர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முன்னிலையில் ஆராய்ந்து பதில் சொல்லட்டும் . பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வெற்றி பெற மாட்டோம் என தெரிந்த பிறகு வாரணாசியில் போட்டியிட்டால் என்ன? ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் என்ன? போகும் இடம் தெரியாதவர், எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என விமர்சித்தார்.

MUST READ