spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆதவ் வாடா மோதுவோம்! விஜய் ஆர்.எஸ்.எஸ் குழந்தைதான்! எச்சரிக்கும் விசிக நிர்வாகி!

ஆதவ் வாடா மோதுவோம்! விஜய் ஆர்.எஸ்.எஸ் குழந்தைதான்! எச்சரிக்கும் விசிக நிர்வாகி!

-

- Advertisement -

சீமானும், விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்ற குழந்தைகள் என்று திருமாவளவன் சொன்ன கருத்து சரியானதே, அவர் ஒருபோதும் ஆதாரம் இன்றி பேச மாட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிபி சந்தர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விசிக கொள்கைப்பரப்பு செயலாளர் சிபி சந்தர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, விசிகவில் இருப்பவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக தவெகவுக்கு வந்துவிட்டார்கள். தற்போது கட்சியில் திருமாவளவனும், அவருடன் 20 பேரும் தான் உள்ளனர் என்று கூறியுள்ளார். விசிகவில் சில முரண்பாடுகள் கொண்டு நாகை திருவள்ளுவன், செல்வப்பெருந்தகை போன்றவர்கள் வெளியே போயுள்ளனர். விசிகவுக்கு ஒருமுறை வந்தவர்கள் தனிப்பட்ட முரண்படுகளோடு வெளியேறி இருக்கலாம். ஆனால் கொள்கையில் ஒருபோதும் முரண்பட மாட்டார்கள். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்பது திருமாவளவனோடு 6-7 மாத காலம் பழகி, ஆதவ் அர்ஜுனா போன்ற முட்டாளை கட்சி சந்தித்துள்ளது என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஐய்யப்பாடு. விசிகவில் முதன்முறையாக உறுப்பினர் அட்டை வழங்குவதாக ஆதவ் அர்ஜுனா சொன்னார். ஆனால் அவருடைய நோக்கம் என்பது கட்சியினரின் தரவுகளை சேகரிப்பதாக தான் இருந்துள்ளது. ஆதவை விசிகவில் சேர்க்க காரணம், மாற்று சமூகத்தினரையும் சேர்க்க வேண்டும் என்ற வேளச்சேரி தீர்மானத்தின் அடிப்படையில் தான். திருமாவளவன் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேரை சந்திப்பார். அவரை போய் 20 பேர் தான் இருப்பார்கள் என்று ஆதவ் சொல்கிறார்.

Aadhav Arjuna - Thirumavalavan

திருமாவளவனை, திமுகவின் அடியாள் என்றும் ஆதவ் விமர்சித்துள்ளார். எங்களுக்கான தகுதியை, எங்களுக்கான பெருமையை திமுக இன்றும் தருகிறது. இதற்கு பெயர் அடியாள் வேலை இல்லை. நீங்கள் உங்கள் மாமனாருக்கு பார்ப்பது தான் அடியாள் வேலையாகும். மார்ட்டின் குடும்பத்தில் ஆதவ் அர்ஜுனா பெண் எடுக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? எந்த தகுதியும் இல்லாத உங்களுக்கு பெண் கொடுப்பதற்கு காரணம் அதுதான். நீங்கள் அந்த குடும்பத்தில் அடியாள் வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா வந்த பிறகு தான் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டதாக சொல்கிறார். குடும்பத்திற்குள்ளே இத்தனை பிரச்சினைகளை செய்த நபர், ஒரு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த எத்தனை சதிகளை செய்வார். அவர் எதற்காக வந்தார் என்பதை திருமாவளவன் விரைவாக அறிந்துகொண்டு கட்சியில் இருந்து வெளியேற்றினார். அவர் எதற்காக வந்தாரோ, அந்த நோக்கம் அங்கே நிறைவேறவில்லை.

புஷ்பா-3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுன்...

விசிகவில் இருக்கும் 20 பேர் தான் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். ஆனால் தொண்டர்களின் மனநிலை வேறு என்று ஆதவ் சொல்கிறார். தொண்டர்களின் மனநிலை என்பது, திருமாவளவனை ஒருவர் பேசினால் அவரை புரட்டிப்போட்டு அடிப்பதாகும். ஆதவ் சொல்கிற 20 பேர் தான் கொந்தளிக்கிற தொண்டர்களை தடுத்து வைத்துள்ளனர். இல்லாவிட்டால் ஆதவ் அர்ஜுனாவின் வீடு தரைமட்டமாகி இருக்கும். எங்கள் முகாமுக்குள் வந்து, எங்களின் டேட்டாவை திருடிவிட்டு எங்களால் விலாசம் பெற்ற ஒருவர், அதை மறந்துவிட்டு பேசுகிறபோது மன்னிக்க முடியாது. தன்னுடைய பேச்சை திரித்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். அவர் பேசிய வீடியோவே உள்ளதே. அதை பார்த்துவிட்டுதான் நாங்கள் அடிக்கிறோம். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறபோது, விசிகவில் உள்ளவர்களும் இங்கு வந்துவிட்டனர். அங்கு ஆட்களே இல்லை என்று சொல்வதன்  மூலம் கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ் பெற்ற குழந்தைகள் என்று திருமாவளவன் சொன்னதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் உண்மையை தான் சொல்கிறார். 2011 ஏப்ரல் 5-ல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே போராடியபோது, விஜய் போய் சந்தித்தார். அதற்கு மறுநாள் பாஜகவின் தூதுவர்கள் விஜயை சந்தித்தனர். துப்பாக்கி, மெர்சல், வாரிசு, கோட் போன்ற அனைத்து படங்களுக்கும் பாஜக தான் பைனான்ஸ் செய்தது. 2011-க்கு பிறகு பாஜக தூதர்கள் சந்தித்தது உண்மை. அதன் பிறகு அவருடைய படங்களுக்கு நிதி வழங்கியது உண்மை. வரி ஏய்ப்பு செய்த விஜய், ஊழல் ஒழிப்பு குறித்து பேசலாமா? ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு சென்றது ஊழல் காரணமாக தானே. 2011ல் இருந்து பாஜக சம்பாதித்த ஊழல் பணத்தை வெள்ளையாக்க பயன்பட்டவர் விஜய். ஒரு கட்சி தொடங்கினால் அதற்கு செயல் திட்டம் இருக்க வேண்டும். விஜய்க்கு என்ன செயல் திட்டம் உள்ளது. ஊழல் ஒழிப்பு என்பது சுதந்திரம் வாங்கியது முதல் உள்ளது. 2011லியே விஜயின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. அப்போது தான் பாஜக அவரை தத்தெடுத்து படத்திற்கு நிதி வழங்கி வருகிறது.

MUST READ