Homeசெய்திகள்கட்டுரைஎதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!

எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!

-

- Advertisement -

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்  முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உத்தரவிடுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியுப் சேனலுக்கு  அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் குறித்தும், சனாதனம் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். ஒரு தனிப்பட்ட நபராக இவற்றை பேசுவதில் தவறில்லை. ரவி ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை செயல்படுத்துகிறார். திராவிடம் என்று சொல்கிறபோது,  பெரியார் பயன்படுத்திய அந்த இடத்திற்கு வருகிறது. ஆனால் தமிழர்களிடம் எதுவும் கிடையாது. அவன் மத விவகாரங்களில் நின்றதே கிடையாது. நாம் கும்பிடும் சாமிகளுக்கு வைதிக மதத்தின் தொடர்பு கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கிறார். அதனால் தான் காவி உடை அணிந்த வள்ளுவர். பூணூல் போட்ட திருவள்ளுவர். ருத்திராட்சம் போட்ட திருவள்ளுவர் என்று சொல்கிறார். நாளை திருவள்ளுவர் திருக்குறளை சமஸ்கிருத மொழியில்தான் எழுதினார் என்றும் சொல்வார். பெரியார் மானம் உள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். ஆனால் மானம் இல்லாத ஒருவருடன் மள்ளுக்கட்ட முடியாது என்றார். அது போன்ற நபர்தான் இவர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள்  மூலம் மத்திய அரசு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்  முடிவுக்கு வந்துள்ளது. மாநில உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள், அம்மாநிலத்தின் எல்லைகளுக்களுக்குள்  செயல்படக்கூடியதாகும். ஆனால் உச்சநீதிமன்றம் அரசமைப்பு சட்டத்தின் படி செயல்பட கூடியதாகும். உச்சநீதிமன்றம் தற்போது வழங்கி இருக்கும் தீர்ப்பு என்பது, இதற்கு மேல் எதுவும் செய்யக்கூடாது என்பதாகும். அப்படி செய்தால் நீங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கிறீர்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கேட்டு விடுவார்கள்.

அந்த காலத்தில் மசோதாக்களில் பிரச்சினை என்றால் முதலமைச்சர் காமராஜர் ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவில் உள்ள குறைகளுக்கு விளக்கம் அளித்து சரி செய்வார். ஆளுநரும், முதலமைச்சரும் சேர்ந்ததுதான் மாநில அரசு. அவர்களுக்குள் மோதல் என்பதே வரக்கூடாது. நமிழ்நாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டேன், தமிழ் மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். திராவிடம் என்று சொன்னாலே பிடிக்காது. ஆனால் தமிழ்நட்டில் உள்ள வளங்களை மட்டும் ஏற்றுக்கொள்வார். தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்வார். அதில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கை வைத்தார். உடனே 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கனார்.

இன்றைக்கு உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிற தீர்ப்பு என்பது பாஜக உள்ளிட்ட அனைவருக்கும் சொல்லப்பட்ட எச்சிரக்கையாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த வளர்ச்சியும் இருக்காது. அங்கு லவ் ஜிஹாத், பெண்களை முஸ்லீம்கள் தொட்டால்  அவர்களுக்கு துக்கு தண்டனை என்று சட்டங்களை இயற்றுகிறார்கள். இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. அங்கு எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஆர்எஸ்எஸ் அமைப்பால் வளர்க்கப்பட்டவர்தான் ஆர்.என்.ரவி. இவர்களுக்கு எப்படி அரசியலமைப்பு சட்டம் தெரியும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவார் என்று சொல்கிறார்கள். ஆளுநரை மாற்றுவதால் என்ன நடைபெற போகிறது. அதே கம்பனி அதே பாஸ் என்கிற போது, அதே கம்பெயினியிடம் வேறு செக்யுரிட்டியை பாதுகாப்பற்கு கேட்கிறோம். அவர் இங்கு துப்பாக்கியை வைத்துக்கொண்டு தூங்குகிறார். ஆளுநர்கள் அரசியமைப்பு சட்டத்தின்படி மாநில அரசின் கண்காணிப்பாளர் ஆவார்.

மத்திய அரசு மாநிலத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தான் கேட்பார்கள். அவர் எந்த செயலாளரையோ, காவல்துறை உயர் அதிகாரிகளையோ, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர்களிடம் விவரங்களை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார். ரவி தான் சொல்கிறார் ஆளுநராக தனக்கு வேலையே இல்ல என்று. அதனால் ஒரு 60 பேரை அனுப்புங்கள் எதாவது கூடடம் நடத்தி பேசுகிறேன் என்று சொல்லுவார். மற்றபடி இதனால் எதுவும் ஆகாது. திமுக – அதிமுக தவறு என்பது இந்த நாட்டை ஒரு கூட்டரசாக மாற்ற தவறியதுதான், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ