spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த விசாரணை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யார் விசாரித்தாலும் என்ன நடந்தது? என்கிற உண்மை வெளிவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தீர்ப்பு யாருக்கு வெற்றி, தோல்வி என்று அலசுவதே அபத்தமானது. ஆதவ் அர்ஜுனா, முதல் நாளில் இருந்தே திமுக எங்கள் மீது குற்றம் சுமத்தியது, அதற்கு வடிகால் போல  தீர்ப்பு அமைந்திருப்பதாக தெரிவித்தார். அப்போது தவெக மீதான குற்றச்சாட்டு. அதை துடைப்பதற்கான வழியாக சிபிஐ விசாரணை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால்? 41 பேர் மரணத்திற்கு யாருமே பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையா? இந்த விவகாரத்தில் நிஜமான தீர்வு என்பது இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாமல் இருப்பது தான். நாம் இனி அந்த பார்வை தான் பார்க்க வேண்டும். சிபிஐ விசாரித்து யாரையாவது குற்றவாளி என்று காண்பித்து தூக்கில் போடப் போவது கிடையாது. யாரையும் குற்றம்சாட்டுவது போன்ற விஷயம் இது அல்ல.

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்..!

ஏனெனில் சிபிஐ விசாரணை கிடைத்துவிட்டதாக கொண்டாடுகிற தவெக தான் நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்குகிற போது நடைபெற்றது விபத்து தான். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் அது வெளியில் வந்து விஜய் சதித் திட்டம் என்று சொன்னார். அரசியலை அரசியலாக செய்யுங்கள். சட்ட நடவடிக்கைகளை அதன் போக்கில் விடுங்கள். சிபிஐ விசாரிக்கட்டும். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருவர் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அரசு வேலை, நிதியுதவி கிடைக்கும் என்று கையெழுத்து வாங்கியதாக சொல்கிறார்கள். இதையும் உண்மையாக இருந்தால் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். சிபிஐ விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் சொல்லியுள்ளனர். அதுதான் முதன்மையாக விசாரிக்கப்பட வேண்டும். இது இறந்த குடும்பத்திற்கு இரண்டாவது துக்கத்தை கொடுக்கிற விஷயமாகும். அவர்களை இந்த இன்னலுக்கு ஆளாக்கி இருக்கக் கூடாது. செய்தது யாராக இருந்தாலும்.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

உங்கள் கட்சியின் மீது உள்ள பழியை துடைப்பதற்காக நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வீர்களா? என்கிற கேள்வி பொதுவெளிக்கு வந்தால் அது தவெகவுக்கு நல்லது அல்ல. விஜய் என்கிற தனி மனிதர், தலைவருக்கும் நல்லது அல்ல. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு அமைத்த எஸ்.ஐ.டி மீதும், தமிழக அரசின் ஆணையம் மீதும் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். அவர்கள் வெறுமனே சிபிஐ விசாரணை என்று சொல்லி இருந்தால் சந்தேகம் எழும். ஆனால் சிபிஐ விசாரணை. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்று சொல்வதால் நம்பிக்கை கொஞ்சம் அதிகமாகும். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது திமுகவுக்கு பின்னடைவு என்பது ஏற்புடையது அல்ல. காரணம் எஸ்.ஐ.டி அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம் தான். அல்லது விஜயை எப்படியாவது சிக்க வைத்திருக்க வேண்டும் என்றால், அவருடைய பெயரை எப்.ஐ.ஆரில் சேர்த்திருப்பார்கள். கரூரில் பதிவுசெய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் வழக்கை விசாரித்ததில் நடைமுறை தவறுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் பார்க்கிறது. பதிவாளரிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள். நீதிபதி செந்தில்குமார், பதிவாளர் மூலம் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார்.

tamilnadu assembly

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயை, அதிமுக – பாஜக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. அதிமுக கூட்டங்களில் தவெக கொடிகள் பறக்க விடுகின்றனர். எடப்பாடி பழனிசாமியே, நாங்கள் தவெக கொடியை கொண்டுவர வேண்டாம். உங்கள் தலைமையிடம் கேளுங்கள் என்று சொன்னோம் என்கிறார். அவர் சொல்லி பல மணி நேரங்கள் ஆனபோதும் விஜய் தரப்பில் இருந்து பதில் அளிக்கவில்லை. இந்த கள்ள மவுனம்தான், யோக்கியமற்ற செயலாகும். நீங்கள் தாரளமாக அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள். இப்படி வேஷம் போட்டுவிட்டு கூட்டணி வைக்காதீர்கள். எந்த விவகாரம் குறித்தும் பேச மாட்டார்கள். பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்கள். ஆனால் ஆட்சி எங்களுக்கு வேண்டும். விஜய் மௌனமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அதிமுகவை நோக்கி நகர்வது போன்ற பிம்பத்தை எடப்பாடி உருவாக்குகிறார். இது அவருக்கும் நல்லது அல்ல. தவெகவுக்கும் நல்லது அல்ல. அப்போது விஜயிடம் என்ன ஆளுமை உள்ளது?

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமையும் பட்சத்தில் வெற்றிக்கூட்டணியாக இருக்கும். வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் திமுக ஒட்டுமொத்தமாக காலியாகிவிடும் என்பது ஏற்புடையது அல்ல. மிக நிச்சயமாக திமுகவுக்கு சவாலான கூட்டணியாக இருக்கும் என்பது ஒரு பார்வை. விஜய் என்கிற பிம்பம் நொறுங்கும் என்பது மிக நிச்சயமான உண்மை. விஜயை ஆதரிக்க நினைக்கும் 100 பேரில் குறைந்தபட்சம் 40 பேராவது அவரிடம் கேள்வி எழுப்புவார்கள். யாரோடு சேர மாட்டேன் என்று நீங்கள் சொன்னீர்களோ, அவர்களுடன் சென்று சேர்ந்துவிட்டால் பிறகு எதற்காக உங்களை நான் ஆதரிக்க வேண்டும் என்று கேட்பார்கள். விஜய் என்ன நிலைப்பாடு வேண்டும் என்றாலும் எடுக்கட்டும். ஆனால் அவர் எதிர்பார்க்கிற பலம் விஜய்க்கு கிடைக்காது. அதிமுகவுக்கு தான் அது பலமாக இருக்குமே தவிர, விஜய்க்கு பலமாக இருக்காது. அவரது அரசியல் பிம்பத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ