spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷா பேச்சை கேட்டு மாட்டிக்கொண்ட எடப்பாடி! ஸ்டாலின் நினைத்தது நடந்தது!

அமித்ஷா பேச்சை கேட்டு மாட்டிக்கொண்ட எடப்பாடி! ஸ்டாலின் நினைத்தது நடந்தது!

-

- Advertisement -

கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது விமர்சனத்தை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராக எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார் என்று மருத்துவர் காந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என கனவு காண்பதாகவும், அதிமுக 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். ஒரு பிரம்மாண்டமான கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதுதான் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையோடு பேச தொடங்கியுள்ளார். அது வரவேற்கதக்கது.

ஒருவழியாக கட்சியை திருப்பி உருவாக்கி, தேர்தல் நிற்கும் தைரியத்தோடு அவர் வருகிறார் என்றால் அந்த தைரியத்தை பாராட்ட வேண்டும். பிரம்மாண்ட கட்சி கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி சொல்கிறார். ஒருவேளை காங்கிரஸ் அவர்களுடன் கூட்டணி வருகிறதோ என்னவோ? அவர்களை விட்டால் பிரம்மாண்ட கட்சி என்றால் அது தவெக-ஆக இருக்கலாம். ஏனென்றால் ஊடகங்களின் கணக்குப்படி தவெகவில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் பிரம்மாண்டமான கட்சி.

எடப்பாடி பழனிசாமியால் கூட்டணியை கட்டியமைக்க முடியாதபோதும், பூடகமாக பேசி வருகிறார். அதுதான் தலைவருக்கு இருக்கும் நம்பிக்கையாகும். முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி தலைவராக ஆகி இருக்கிறார். தேர்தலை சந்திக்காமல் புறக்கணித்தவர், தேர்தலை சந்திக்கப் போகிறேன். வெற்றி பெற போகிறேன் என்று பேசினார் என்றால் அது ஒரு நல்ல மாற்றமாகும்.  அவர் முயற்சி செய்யட்டும் 210 இடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது வெற்றி பெறுவார்.

யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிக சாதனைகள் செய்திருக்கிறோம் என்று ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் தான் அதிக சாதனைகள் செய்திருக்கிறார். சாத்தான்குளம், ஸ்டெர்லைட் ஆலை, வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் எரிப்பு, நீட் தேர்வை கொண்டு வந்தது, இப்படி எவ்வளவோ சாதனைகள் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கலாம்.

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ச்சியாக சொல்லி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தானே கூட்டணிக்கு தலைவர் என்றும், தான் சொல்வது தான் முடிவு என்றும் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் அமித்ஷா சொல்வதை தான் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்வாரா?  நான் சுயமாக நிற்கிறேன் என்றுதான் அவர் பேசியாக வேண்டும். அதை தான் அமித்ஷா சொல்லியுள்ளார்.  நீங்கள் சுயமாக நிற்பதாக சொல்லுங்கள் என்றுதான் அமித்ஷா சொல்லியுள்ளார். இதை அமித்ஷாவினுடைய அனுமதியோடு தான் எடப்பாடி பேசி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். அதிமுகவில் இருந்து அண்ணா மற்றும் திராவிட என்ற வார்த்தைகளை எடுத்து விடுங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாகும். மற்றபடி பாஜகவும், அதிமுகவும் ஒரே கட்சிகள் தான். நான் தான் கூட்டணியின் தலைவர். அமித்ஷாவின் அனுமதியோடு இதை வெளியிடுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். திமுக 15 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஒரு எதிர்க்கட்சி அப்படி தான் சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும். அதை பார்க்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் அரசியலுக்கு வர ஆரம்பித்துள்ளார்.

கம்யூனிஸ்ட்டுகள் என்றைக்கு திமுகவிடம் கைநீட்டி காசு வாங்கினார்களோ, அன்றைகே அழிந்துவிட்டதாக  எடப்பாடி விமர்சித்துள்ளார். அவர்களுக்கு 4 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். உங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு எத்தனை கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். நீங்கள் காசு கொடுத்தபோதும். உங்களிடம் காசு வாங்கியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் யோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி காசு கொடுத்து கூட்டணிக்கு கூப்பிடுகிறார் என்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தவில்லை என்றும் சொல்லும் எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டத்தை நடத்தினார்? எதிர்க்கட்சி தலைவர் இவர் தானே. அரசின் அனைத்து சலுகைகளையும் வாங்கிக் கொண்டு 4 ஆண்டுகளாக வீட்டிலேயே உட்கார்ந்து இருந்ததாரே இவரை என்ன செய்வது? இந்த 4 ஆண்டுகளில் ஒரு போராட்டம், ஒரு மாநாடு நடத்தினாரா எடப்பாடி பழனிசாமி? ஏன் தேர்தலில் போட்டியிட்டாரா? 10 தோல்வி பழனிசாமி என்று பாரத ரத்னா போன்ற பட்டத்தை வாங்கி வைத்துள்ளார். ஆனால் அவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் நிற்கிறார் என்று சொல்வதே சந்தோஷம் தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ